வேலூர்_06
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவரும், பாஜ கூட்டணியின் சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் கூறினார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் பாஜ கூட்டணியின் புதிய நீதிக்கட்சியின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம், இன்று
செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில், கூட்டணியின் 9 கட்சி நி்ரவாகிகளிடம் தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.
சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன் என்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரை சின்னம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
இந்த வெற்றியை பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திரமோடியிடம் சமர்ப்பிப்பேன். தமிழகத்தை பொறுத்தவரை 15 தொகுதிகளில் பாஜ கூட்டணி வெற்றிபெறும். அகில இந்திய அளவில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும்.
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு என மூன்று பஞ்சாயத்துகளில் எங்கள் ஏஜென்டுகளை அனுமதிக்கவில்லை.
இதுதொடர்பாக அப்போதே மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தோம். அந்த மூன்று பஞ்சாயத்துகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக கேட்டிருக்கிறோம்.
ஏதும் நடக்கவில்லை என்றால், நீதிமன்றம் செல்வோம். அதேபோல் ஜனாதிபதி, மத்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மூன்று பஞ்சாயத்துக்களில் உள்ள 8 பூத்களில் பாஜ கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளே இல்லை.
இப்போதைக்கு நீதிமன்றம் போக முடியாது. தேர்தல் நடவடிக்கைகள் முடிந்தால்தான் வழக்கு போட முடியும். புதிய நீதிக்கட்சியை பொறுத்தவரை ஜூன் 4ம் தேதிக்கு பிறகு கட்சி வளர்ந்துவிடும்.என்று ஏ சி சண்முகம் கூறினார்.