நிலக்கோட்டை,மே.14:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்று வந்த மாணவ மாணவிகள் கடந்த மாதம் 25 26 27 28 ஆகிய தேதிகளில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 14-வயதிற்குட்பட்டோருக்கான தேசியளவிலான ஜூனியர் ஸ்கேட்டிங் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் கேப்டன் மதுஸ்ரீ தலைமையில் லீபிகா பிரதிக்ஷா யாழ்னி தனுஷ்கா ஆகிய ஐந்து மாணவிகள் கலந்துகொண்டனர் டெல்லி கல்கத்தா ராஜஸ்தான் கேரளா உட்பட 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டதில் இறுதிப்போட்டியில் அஸ்ஸாம் அணியுடன் மோதி இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் வெற்றனர். இதேபோல இந்த மாதம் 4 5 ஆகிய தேதிகளில் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற 17-வயதிற்குட்பட்டோர்க்கான தேசியளவிலான பெடரேஷன் கப் சீனியர் ஸ்கேட்டிங் போட்டியில் பயிற்சியாளர் தங்கலெட்சுமி தலைமையில் கேப்டன் தியோஸ்ரீ சாயினி உட்பட பனிரெண்டுபேர் கலந்து கொண்ட அணியில் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற சௌஷிகா விதுலாஸ்ரீ அனுஸ்ரீ ரமித்தா நிவேதிதா ஃபிரான்ஸி உட்பட ஆறு மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் கர்னாடகா கோவா மஹாராஸ்டிரா குஜராத் தெலுங்கானா உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டதில் டெல்லி அணியுடனான இருதி போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்று திரும்பினர் அதனை தொடர்ந்து செங்கல்பட்டி நடந்த பதினோறு வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் உட்பட அனைவருக்கும் சர்வதேச நடுவர் பிரேம்நாத் தலைமையில் சிறப்பு நினைவு பரிசுகள் மற்றும் சால்வைகள் அனுவித்து பாராட்டினர் மேலும் இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் சக்திவேல் கல்யாண் உட்பட பயிற்றுனர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.