இரணியல், மார்- 2
வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் பிரபிஷ் (18) இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபு, பிரதீஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
நேற்று இரவு பிரபு, பிரதீஷ் ஆகியோர் அந்த பகுதியில் வைத்து பிரபீசை அவதூறாக பேசியுள்ளார். இதை பிரபிஸ் தட்டி கேட்டதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறு பிரபு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபிஸ் முதுகில் மாறி மாறி குத்தியதாக தெரிகிறது. பிரபிஸ் சத்தம் போடவே அவரது உறவினர்கள் ஓடிவந்துள்ளனர்.
அப்போது மிரட்டல் விடுத்த அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பிபிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன் தம்பியான பிரபு, பிரதீஷ் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் பிரபு கொடுத்த புகாரின் பேரில் பிரபிஷ், செல்வன் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.