வேலூர் மாவட்டம்
கேவி குப்பம் மத்திய ஒன்றிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வடுகன்தாங்கல் பேருந்து நிலையதில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. மத்திய. ஒன்றிய செயலாளர் நாகராஜ் தலைமையில் வேலூர் புறநகர் மாவட்ட துணை செயலாளர் கலைவாணி சந்திர வேலு மாநில பொதுக்குழு உறுப்பினர் லத்தேரி எம் கிருஷ்ணமூர்த்தி வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தொழிற்சங்க துணைத் தலைவர் ஆர் சந்திரவேலு மத்திய ஒன்றிய அவைத் தலைவர் சா. இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மே ஜூன் மாதங்கள் வரை தொடர்ந்து வழங்கப்படுகிறது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர் கே. பி பிரதாப் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் அப்பகுதி மக்களுக்கு நீர்மோர் தர்பூசணி பப்பாளி பழம் முலாம்பழம் டாட்டா குளுக்கோ ப்ளஸ் ஆகிய பழவகைகள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது புறநகர் மாவட்ட பொருளாளர் பி.தனசீலன் மாவட்டத் துணைச் செயலாளர் குடியாத்தம் ஜெ. லோகநாதன், கீழ் முட்டுக்கூர் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்திஉட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்