கன்னியாகுமரி மே 14
கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதியில் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கிய இளம் ஜோடியால் அதிர்ச்சி. கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் தங்கி மறுநாள் காலை எழுந்து சூரிய உதயத்தை கண்டு செல்வது வழக்கம் இதற்காக கன்னியாகுமரியில் ஏராளமான தனியார் விடுதிகள், காட்டேஜ்கள், ரிசார்ட்கள் அங்கு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள ஒரு தனியார் விடுதியில் இளம்ஜோடிகள் வந்திருப்பதாகவும், அவர்களை பார்க்க சந்தேகமாக இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசாரும், சம்பந்தப்பட்ட லாட்ஜ்ஜூக்கு விரைந்து சென்று, ஒவ்வொரு அறையிலும் சென்று சோதனை செய்தார்கள். அப்போது, 3 ரூம்களில் இளம் ஜோடிகள் தங்கியிருந்தார்கள். இதில் ஒரு ஜோடியிடம் விசாரணை நடத்தியபோதுதான் தெரிந்தது, அவர்கள் 2 பேருக்குமே 17 வயதுதான் ஆகிறதாம். 2 பேருமே பிளஸ் 1 படித்து வருகிறார்களாம்.எனவே, 2 பேரையுமே தனித்தனியாக போலீசார் விசாரித்தனர். அப்போது இந்த ஜோடி நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் என்றும் இன்ஸ்டாகிராம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பிறகு செல்போனில் பேசி வந்துள்ளதாகவும் ஒருகட்டத்தில் இருவருக்குமே நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. இதனால், தன்னுடைய நண்பர்களுடன் கன்னியாகுமரிக்கு டூர் செல்வதாக இருவருமே அவரவர் வீட்டில் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். நண்பர்களுடன் கன்னியாகுமரி வந்தவர்கள், ஜாலியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த மாணவி மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.மகளிர் போலீசாரும் 2 வீட்டின் பெற்றோருக்கும் தகவல் தந்து ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். அங்கு வந்த மாணவியின் அம்மா, கன்னியாகுமரி மகளிர் போலீஸில், மாணவன்மீது புகார் தந்தார். இந்த புகாரின்பேரில், மாணவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. பள்ளியில் படிக்கும் சிறு வயதினர் என்றுகூட பார்க்காமல், இந்த ஜோடிக்கு ரூம் ஒதுக்கி தந்த மேனேஜர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.