நாகர்கோவில் மே 5
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :-
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் உண்மை தொண்டனுமான அன்பு அண்ணன் KPK. ஜெயக்குமார் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அன்னாரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு ஜெயக்குமார்-க்கு உண்டு. இன்முகத்துடன் அனைவருடனும் பழகி நட்பு பாராட்டும் அவரது பண்பு என்றும் அனைவரது உள்ளங்களிலும் நிலைத்து நிற்கும். எனது தந்தை அமரர் வசந்த குமார் அவர்களிடம் ஆழமான மரியாதை வைத்து மிக நெருங்கி பழகியவர் ஆவார். அது போல் என்னிடமும் மிக அன்பு கொண்டு பழகி வந்தார். அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அன்பர்களின் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன். ஜெயக்குமார் மரணத்தின் காரணத்தை கண்டறிந்து அதற்க்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்து தக்க தண்டனை பெற்று தர வேண்டும் என காவல் துறை அதிகாரிகளை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.