திண்டுக்கல், மே 13
நிலக்கோட்டை அருகே கூவானுத்து பகுதியில் வேடசந்தூர் எஸ்.ஆர்.எஸ் வேளாண் கல்லூரி மாணவர்களான ஜான் மெல்வின், கார்த்திக் ராஜா, கார்த்திக்,கவின் ராஜ், கிஷோர்,லக்ஷ்மி நாராயணன், லோகேஷ் குமார், லோகேஷ்,முகமது யாசீன் ஆகியோர் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறுதானியம் என்பது வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளைக் குறிக்கும்.சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் திருக்குறளில் பல்வேறு பாக்களில் பனை என்பதற்கு எதிர்பதமாய் தினை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வள்ளியை முருகன் தினைக்களத்தில் சந்தித்ததை வள்ளி திருமண கதைப் போக்கில் அறிகிறோம். இவ்வகைத் தகவல்கள் வாயிலாக சிறுதானியம் என்பது பாரம்பரிய உணவு என நிறுவயியலும்.