சிவகங்கை :மே -07
சிவகங்கை நகரை அடுத்துள்ளது சோழபுரம் இந்த ஊரில் ஸ்ரீ ரமணவிகாஸ் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி நடந்து முடிந்த +2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளியில் 148 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 148 மாணவர்களுமே இப்போது தேர்ச்சி அடைந்துள்ளனர் .
இந்தப் பள்ளியில் ச.ஹரிதா என்ற மாணவி 600 க்கு 581 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்திலும் க.ஹரிணி என்ற மாணவி 600 க்கு 576 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதேபோல் ர.கார்த்திகா
மு. ஷஃபானாபானு ஆகியோர் 600 க்கு 564 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
மேலும் இந்த பள்ளியில் கணினி அறிவியலில் மூன்று மாணவர்களும் பொருளியல் மற்றும் கணினி பயன்பாட்டு பாடங்களில் தலா ஒரு மாணவரும் நூற்றுக்கு நூறு சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொத்தத்தில் 575 மதிப்பெண்களுக்கு மேல் இரண்டு மாணவர்களும் 550 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும் 500 மதிப்பெண்களுக்கு மேல் 33 மாணவர்களும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 103 – மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர் .
இவ்வாறு அதிகப்படியான தேர்ச்சியை இந்தப் பள்ளி அடைந்துள்ளதால் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியின் நிர்வாகத்தை பாராட்டி வருகின்றனர்.