வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு திருவோண தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு திருவோண தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து அந்த திருவோண தீபத்தை கைகளில் சுமந்தபடி பின்பக்கமாகவே நடந்து சென்று ஶ்ரீராமர் பாதுகை மற்றும் ஶ்ரீராமரின் உருவம் பொறித்த விக்ரகத்தை பின்பக்கமாக சுற்றி வந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு திருவோண தீப சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகளுக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில் பட்டாச்சாரியார் ஸ்ரீரங்கம் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் முறைப்படி, சிறப்பாக செய்திருந்தார். இதைத்தொடர்ந்து ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரமும், வெற்றிலை மாலையும் அணிவிக்கப்பட்டது. இந்த திருவோண தீப சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு வழிபட்ட அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது