ஈரோடு, மே.11-
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வன அலுவலர் குமிழி வெங்கட அப்பால நாயுடு, மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தகுமார், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வினோத்குமார் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.