தேனி.
தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்கட்டான் குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் இவர் வீரமங்கை வேலுநாச்சியார் சிலம்ப கலைக்கூடம் என்ற பெயரில் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கற்றுத் தருவதாக கூறப்படுகிறது. இதன்படி மாவட்ட ,மாநில அளவில் மட்டுமே கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பரிசை தொடர்ந்து தனக்குத் தெரிந்த கலைகளை இலவசமாக மாணவ மாணவிகளுக்கு தகுந்த பயிற்சி அளித்து தங்கம் மற்றும் வெள்ளிதகுதி சான்றிதழ்களை தொடர்ந்து பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 3 தேதி இன்டர்நேஷனல் ஓபன் சிலம்பம் சாம்பியன் 2024 போட்டி இலங்கையில் நடைபெற்றது. நடைபெற்ற போட்டியில் மலேசியா, யூஏ ,சிங்கப்பூர் லண்டன் இந்தியா,இலங்கை,என ஆறு நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மானாக்கர்கள், பயிற்சியாளர்கள், ஆசான்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் தேனி மாவட்டம் சின்னமனூர் வேலு நாச்சியார் சிலம்ப கலைக்கூடம் சார்பில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு தங்கம்,மற்றும் தகுதி சான்றிதழை வென்றனர்.இது நமது இந்தியாவிற்கு பெருமை என பொதுமக்களும் சமூக அருளர்களும் புகழாரம் சூட்டினர்.மேலும் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய சின்னமனூர்,தேனி மாவட்டத்தில் உள்ள சிலம்ப குழந்தைகள் வெளிநாடுகளில் போய் தங்களது திறமைகளை வெளிப்படுத்த போதிய நிதி இல்லாத காரணத்தால் ஒரு சிலர் அதனை தட்டிக் கழித்து விடுவதாக கூறுகின்றனர். எனவே நமது தமிழக அரசும் தேனி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு சிலம்பத்தில் ஆர்வம் உள்ள குழந்தைகளை வெளிநாடுகளுக்கு சென்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என ஆசான் ஈஸ்வரன் தேனி மாவட்ட செயலாளர் உலக சிலம்பு விளையாட்டு சங்க தேசிய நடுவர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.தங்கம் வென்று நாடு திரும்பிய மாணவ மாணவிகளுக்கு சின்னமனூர் வாழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆசான் ஈஸ்வரன் கூறுகையில். நாங்கள் வெளிநாடு போய் இந்த தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் அதுவும் தேனி மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதற்கு எங்களுக்கு உறுதுணையாகவும், ஊக்கப்படுத்தியும்,உற்ச் சாகத்தை அளித்து சென்றுவர முழு ஒத்துழைப்பு அளித்த Big Bull எம்பையர் துபாய் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினர்.மேலும் நிறுவனத்தினர் அனைத்து குழந்தைகளுக்கும் மாலை மரியாதை அணிவித்து கருங்கட்டான் குளத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்து குழந்தைகளுக்கு மேலும் ஊக்கப்படுத்தி இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சின்னமனூர் காவல் நிலையம் சார்பில், ஊர் பொதுமக்கள்,மற்றும் பெற்றோர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம், சார்பிலும் உற்சாக வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.