சங்கரன்கோவில். மே.13.
சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவியர்களில் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியில் தங்கி படித்த சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகளான வேலுச்சாமி ,வேலம்மாள் தம்பதியினரின் மகளான நிறைமதி என்பவர் சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து 500க்கு 489 மதிப்பெண் பெற்று பள்ளியில் 3வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் மேலும் கணக்கு பாடத்தில் 100 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அரசு விடுதியில் தங்கி படித்து சாதனை படைத்த மாணவி நிறைமதியை திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் வருங்காலங்களில் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் சந்திப்பின்போது மாணவியின் பெற்றோர்கள் மற்றும் நகர செயலாளர் பிரகாஷ் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராயல்கார்த்தி, வர்த்தக அணி ஆதி, மாரிகுட்டி, தகவல் தொழில் நுட்ப அணி சிவாஜி மற்றும் ஜெயக்குமார், கார்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.