மார்த்தாண்டம் நவ 4
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் களியக்காவிளை பகுதி எஸ்டிபிஐ கட்சியை சார்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியை சார்ந்த இளைஞர்கள் பலர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தாங்களை இணைத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு விஜய்வசந்த் காங்கிரஸ் துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், அரோக்கியராஜன், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார்,
முஞ்சிறை இளைஞர் காங்கிரஸ் வட்டார தலைவர் விஜின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.