தஞ்சாவூர். ஜன.26.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் கள் மற்றும் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களு க்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ரெட் கிராஸ் சொசைட்டி கூட்டரங்கில் நடந்தது.
ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளையின் சேர்மன் மருத்துவர் வரதராஜன் தலைமையேற்று ரெட் கிராஸ் கொடியினை ஏற்றிவைத்து, ரெட் கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டூனன்ட் திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்தி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், பொருளாளர் & செயலாளர் (பொ) ஷேக்நாசர், ரெட் கிராஸ் நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஆலோசகரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளையின் நிர்வாக குழு உறுப்பினருமான ஜெயக்குமார் ரெட் கிராஸ்சின் வரலாறு, கொள்கைகள், குறிகோள்கள் மற்றும் சின்னம் குறித்தும் முதல் அமர்வில் எடுத்துரைத்தார்.
அரசு இராஜா மிராசுதார் மருத்துமனை முன்னாள் இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர் ராதிகாமைக்கல் இரத்ததானம் செய்ய வேண்டிய தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் இரண்டாவது அமர்வில் எடுத்துரைத்தார். மாவட்ட ரெட் கிராஸ் இரத்த வங்கி ஆலோசகர் அப்துல் கபீர் இரத்த வங்கியின் செயல்பாடுகளை விளக்கினார். ரெட் கிராஸ் சொசைட்டியின் மாநில பேரிடர் மேலாண்மை பயிற்றுநர் சுரேஷ்குமார் முதல் உதவி சிகிச்சை மற்றும் பேரிடர் காலங்களில் தன்னார்வலர்களின் பங்களிப்பு குறித்து செயல் விளக்கத்துடன் மூன்றாம் அமர்வில் எடுத்துரைத்தார்.
மன்னர் சரபோஜி அரசு கல்லூரி ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் பாஸ்கரன் அவர்கள் நான்காவது அமர்வில் கலந்துக் கொண்டு உடல் நலத்தை பேணிக்காக்க வேண்டியதின் அவசியத்தையும், போதைப் பொருட்களை பயன் படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து எடுத்துரைத்தார், அனைவரும் போதைப் பொருட்களை பயன் படுத்த மாட்டோம் எனவும், அனைவரிடமும் போதைப் பொருட்களை பயன் படுத்த வேண்டாம் என விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என உறுதி மொழி ஏடுத்துக்கொண்டார்கள். பயிற்சி முகாம் நிறைவு விழா வில் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளையின் பொருளாளர் மற்றும் செயலாளர் (பொ) வகிக்கும் ஷேக் நாசர் கலந்துக் கொண்டு கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்களும் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களும் சிற்பாக செயல்பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் நீலகண்டன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
முன்னதாகதஞ்சாவூர் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியருமான முருகானந்தம் பயிற்சி முகாம் தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்றார். இந்த ஒரு நாள் பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தார்.
இந்த பயிற்சி முகாமில் தஞ்சாவூர்மாவட்டத்தில் இருந்து 27 கல்லூரிகளின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்களும், யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் 100 பேர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.