அரியலூர், ஜூலை:30
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம், வடக்கு இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் காரை குளம் உள்ளது இதில் அவ்வூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருந்த நிலையில் ஒரு ஜேசிபி இயந்திரம் கொண்டு மண் அல்லாமல் 7 ,8 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மிகவும் ஆழமாக வண்டல் மண் எடுப்பதாக வடக்கு இரும்பிலிகுறிச்சி இளைஞர்கள் மத்தியில் குற்றச்சாட்டு இதனால் இளைஞர்கள் வெகுண்டு எழுந்து செந்துறை தாலுக்கா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுது அங்கு வந்த காவல்துறை மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். இதில் அங்கு போராட்டத்தில் இருந்த இளைஞர்கள் ஒரு சில கோரிக்கை வைத்தனர் அதில் வடக்கு இரும்பிலிகுறிச்சி கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் விஷ ஜந்துக்கள் உலாவி வருவதால் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும், ஊருக்கு நியாய விலை கடை கட்டித்தர வேண்டும், இளைஞர்களுக்கு விளையாட்டு கூடம் அமைத்து தர வேண்டும், ஊரில் போதிய தண்ணீர் வசதி இல்லை ஏற்பாடு செய்ய வேண்டும்,ஊரில் தெரு விளக்குகள் தெரியாததால் போதிய வெளிச்சம் இல்லை இதனால் தெரு விளக்கு அமைத்து தர வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தனர் அதனை பெற்றுகொண்ட அதிகாரி மேல் அதிகாரி தாசில்தாரிடம் மனுவினை அளித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் அடிப்படையில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்