திருப்பத்தூர்:டிச:30, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தெற்காசிய சலேசியர் இளையோர் மாநாடு நடைபெற்றது.
29-12-2024 முதல் 1-1-2025 வரையிலான தெற்காசிய சலேசியர் இளையோர் மாநாடு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 4 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான வரவேற்புரையை அருட்தந்தை முனைவர் பிரவின் பீட்டர் அடிகளார் ஆற்றினார்.நிகழ்ச்சியின் தொடக்கமாக சலேசிய இளையோர் மாநாட்டிற்கான சுற்றுச்சூழல்,சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க வேண்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
உலக இளையோர் நல ஆலோசகர் அரு
ட்தந்தை மிகுல் ஏஞ்சல் அடிகளார் காணொலி வாயிலாக புனிதர் தொன் போஸ்கோவின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சி சிறக்க சென்னை மாநில சலேசியத் தலைவர் அருட்தந்தை டான் போஸ்கோ அடிகளார் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இந்திய வருமானத்துறை அதிகாரிகள் திரு. நந்தகுமார் மற்றும் திரு.ஜெயசீலன் ஆகியோர் புனிதர் தொன்போஸ்கோவின் சிறப்புகள், இன்றைய உலகை வெல்ல இளையோர் எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து விரிவாக சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் நாட்டு ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் பரதநாட்டியம், நடனம், நாடகம் வழி தூய நெஞ்சக் கல்லூரி மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 1800 க் கும் மேற்பட்ட சலேசிய இளையோர் வருகைப் புரிந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு நன்றியுரையை அருடதந்தை பார்ட்டிக் லெப்சா அடிகளார் வழங்கினார். அருட்தந்தை ஜான் கிறிஸ்ட்டி, அருட்தந்தை ஜேசுதாஸ் , அருட்தந்தை ஜான் அலெக்ஸ்,கல்லூரி முதவல்வர் அருட்தந்தை முனைவர் தா. மரிய அந்தோனிராஜ், கூடுதல் மதல்வர் அருட்தந்தை மரிய ஆரோக்கியராஜ் உள்ளிட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.