நாகர்கோவில் ஜூலை 27
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திமுக சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இம்முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்.ஜான்சன் தலைமை வகித்தார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலர் ஆர்.மகேஷ் முகாமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலர் பா.பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர் அன்பரசி ராமராஜன், துணைத்தலைவர் சரோஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், பிரேம் ஆனந்த், ஏஞ்சல், மாவட்ட பிரதிநிதிகள் தமிழ்மாறன், ஜஸ்டின்ஜார்ஜ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜானி, ஒன்றிய பிரதிநிதி அகஸ்தியலிங்கம், கிளை செயலர் விஜய கங்காதரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.