நித்திரவிளை , டிச 20
நித்திரவிளை அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு 24 வயது மகள் உள்ளார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அன்றைய தினம் ஆசாரி குடியிருப்பு பகுதி சேர்ந்த பிரதீஷ் (29) என்பவர் பெண்ணின் வீட்டுக்கு சென்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த பெண்ணை காதலிப்பதாக கூறி போதையில் பிரச்சனை செய்துள்ளார்.
அப்போது ஆட்டோ டிரைவர் தனது மகளிடம் பிரதீசை காதலிக்கிறாயா? என்று கேட்டுள்ளார். மகள் மறுக்கவே இது சம்பந்தமாக டிரைவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பிரதீஷ் – ஐ அழைத்து எச்சரித்து அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6- ம் தேதி காலையில் இளம் பெண் விரி விளை சந்திப்பில் பஸ் ஏற நிற்கும்போது அங்கு வந்த பிரதீஷ் தகாத வார்த்தைகள் பேசி பெண்ணின் கையைப் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெண் வேலை பார்க்கும் நிறுவனத்தில் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து இளம்பெண் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் வழக்கு பதிவு செய்து நேற்று (18-ம் தேதி) பிரதீ ஷை கைது செய்தனர்.