நாகர்கோவில் – நவ- 02,
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வீரச்சந்திரன் இவரது வீட்டின் பின்புறம் குளியல் அறையில் அவரது மனைவி குளித்துக் கொண்டிருந்தார், அப்போது ஆரல்வாய்மொழி ஆலடிநகர் பகுதி சேர்ந்த பாலமுருகன் (29)அவரது செல்போனில் மறைந்திருந்து வீடியோ பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த வீர சந்திரனின் மனைவி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார் உடனே ரவிச்சந்திரன் விரைந்து வந்து பாலமுருகனை பிடித்து செல்போனை பறித்து வீடியோ காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அதனை தொடர்ந்து போலீசார் பாலமுருகனின் செல்போனை பறிமுதல் செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், இச்சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.