நித்திரவளை, மார்- 11
நித்திரவிளை அருகே பூத்துறை கிறிஸ்துநகர் பகுதியை சார்ந்தவர் ஆண்டனி. மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி ரதி (40). நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த ஜாண்மனு (34) என்பவர் ரதியின் வீட்டுஅத்துமீறி நுழைந்து, ரதியை கையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி போட்டுள்ளார்.
ரதி சத்தம் போட்டு உள்ளார். இதில் அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே அந்த பகுதியில் கடந்த கம்பியை எடுத்து ரதியை பார்த்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு ஜாண்மனு தப்பி சென்றுள்ளார். இது சம்பந்தமாக ரதி கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாண்மனுவை கைது செய்தனர்.