வேலூர்_18
வேலூர்மாவட்டம்,முள்ளிப்பாளையம் வீராசாமி தெருவை சேர்ந்தவர் சத்யாவின் மகன் அவினாஷ் (30) கடந்த 14 ஆம் தேதி வாணியம்பாடியில் இருசக்கர வாகனத்தில் அவினாஷ் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார் அவரை பூட்டுத்தாக்கில் உள்ள ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனையில் அவினாஷ் அனுமதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு மூளைச்சாவடைந்தார் இதனை அடுத்து அவினாஷ் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் உறவினர்கள் முன் வந்ததை அடுத்து இருதயம் சென்னை எம்.ஜி.எம் மற்றும் அப்போலோ மருத்துவமனைக்கும் நுரையீரல்கள் எம்.ஜி.எம் மற்றும் கிளென் ஈகல் மருத்துவமனைகளுக்கும்,கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சி.எம்.சி மருத்துவமனை ராணிப்பேட்டை மற்றும் வேலூர் சி.எம்.சிக்கும்,கண்கள் சி.எம்.சி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது