திருவட்டாறு, பிப்.4 –
கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் சகாய பிரவீன். இவர் வெளிநாட்டில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிஷா (24). இவர்களுக்கு திருமணமாகி மெல்லினா ( 4 ), சியானா (3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அனிஷா தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேர்க்களம்பி கோடு உள்ள தன் தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார்.
கடந்த ஒரு வாரமாக அங்கே தங்கி இருந்த அவர் மீண்டும் கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் கணவர் வீட்டுக்கு செல்லவில்லை. இதை அடுத்து மகள் மற்றும் பேரக் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தாயார் தேடினார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
இது குறித்து தாயார் ரோஸ்லேட் என்பவர் திருவட்டாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அனுஷா மற்றும் அவர் இரண்டு குழந்தைகளை தேடி வருகிறார்கள்.