புதுக்கடை, டிச- 2
புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறை பகுதி சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி ஷீஜா (29). இவர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜேஷ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் ஸ்ரீஜா மணமடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் 29-ம் தேதி தனது தாய் வீடு சென்ற ஷீஜா அடுத்த நாள் 30-ம் தேதி வீட்டிற்கு வந்த பின் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மதியம் வீட்டில் படுக்கை அறையில் உள்ள மின்விசறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் இது குறித்து புதுக்கடை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் தூக்கில் தொங்கிய ஷூஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது ஒரு ஷீஜாவின் தாயார் விஜயாபாய் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.