திண்டுக்கல் ஜுன்: 23
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பேறிபட்டியில் யோகா தினத்தை முன்னிட்டு டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் மாணவர் நற்பணி மன்றம் சார்பாக யோகா பயிற்சி நடத்தப்பட்டது, இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எ.எம்.ராஜரத்தினம் தலைமை தாங்கினார்.கௌரவத் தலைவர் வழக்கறிஞர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்துக் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாஸ் அறக்கட்டளை தலைவர் சக்திவேல் , ஊராட்சி மன்ற செயலாளர் பரமேஸ்வரன்,வார்டு உறுப்பினர்கள் அருகாம்பாள், காளீஸ்வரிநாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து, யோகா பயிற்சி பெற்றவர்களுக்கு இந்திய அரசு நேருக்கு யுவகேந்திரா வழங்கிய பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்றத் தலைவி பூமாதேவி, விஜயலட்சுமி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர் . நிகழ்ச்சியின் முடிவில் மன்ற நிறுவனர் மருதைகலாம் நன்றி கூறினார் .