சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் திருப்பாச்சேத்தியில் அருள்மிகு ஸ்ரீ மறுநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகிய நாதர் சிவன் கோவில் உள்ளது.
இங்கு மருது பாண்டியர்களின் படைத்தளபதியாக இருந்த துப்பாக்கி கவுண்டர் சிலையும் உள்ளது. துப்பாக்கி கவுண்டரின் 223 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் மதுரை ஆதீனம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துப்பாக்கி கவுண்டரின் சிலைக்கு மாலை அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு அவரை வணங்கினார்.
இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.