தஞ்சாவூர். டிச.5.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் இலக்கிய துறையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
துணைவேந்தர் பொறுப்பு சங்கர் தலைமை வகித்தார். இலக்கிய துறை பேராசிரியர் இளையாப் பிள்ளை நோக்கவுரையாற்றினார் பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு தியாகராஜன் ,மொழிப் புல முதன்மையர் கவிதா வாழ்த்துரையும், திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி தமிழ் மொழி மற்றும் ஆய்வு துறை தலைவர் பார்த்திப ராஜா சிறப்புரையாற்றி னார்
முன்னதாக இலக்கியத் துறை தலைவர் தேவி அனைவரையும் வரவேற்றார். முனைவர் தனலட்சுமி நன்றி கூறினார் நிகழ்ச்சியை முனைவர் பட்ட ஆய்வாளர் மாசிலாமணி தொகுத்து வழங்கினார்