பொங்கலூர்பிப்:18 அழகுமலையில்
களை கட்டிய ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி 6வது ஆண்டாக நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில் இந்த விழா நடைபெற்றது போட்டிக்கான வாடிவாசலில் இருந்து இருபுறமும் சுமார் 200 அடி நீளத்திற்கு பார்வையாளர்கள் அமர கேலரி அமைக்கப்பட்டு இருந்தது மேலும் முக்கிய நிர்வாகிகள் அமர்வதற்கு தனி கேலரியும் அமைக்கப்பட்டிருந்தது நேற்று சுமார் 7 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார். போட்டி தொடங்கியதும் முதல் காளை அழகுமலை கோவில் சார்பில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை அதன் பின்னர் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் அவர்கள் காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர் காளைகள் சீறிப்பாய்ந்து வரும்போது வீரர்கள் களை யுடன் மல்லுக்கட்டி போராடி அடக்கிய காட்சி பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது. ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது பார்வையாளர்கள் இந்த காட்சிகளை கண்டு ரசித்தனர். இந்த போட்டியில் 800 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஷ் அசோக் தலைமையில் பல்லடம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் அவினாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்தம்பிக்கை உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிள் பரிசு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த வீரர்களாகவும் முதல் பரிசினை சிவகங்கையை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு மோட்டார் சைக்கிளும் இரண்டாம் பரிசு பெற்ற நாமக்கல் கார்த்திக்கு ஒரு பவுன் தங்க நாணயம் மூன்றாம் பரிசு பெற்ற மதுரை கார்த்திக்கு மினி டில்லர் விசை கலப்பை பரிசாக வழங்கப்பட்டது. அது போல் சிறந்த காளை மதுரையைச் சேர்ந்த ஆறுச்சாமி என்பவர் காளைக்கி மோட்டார் சைக்கிள் இரண்டாம் இடம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவருக்கு மினி டிரில்லர் மூன்றாம் பரிசாக சிவகங்கையை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு மினி டில்லர் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். இதில் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் பொங்கலூர் ஒன்றிய முன்னாள் தலைவர் வக்கீல் எஸ். குமார் அழகுமலை ஜல்லிக்கட்டு காளை நல சங்க தலைவர் லீடர் டேப் பழனிச்சாமி பொருளாளர் சுப்பிரமணி இளைஞரணி தலைவர் கௌரிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.