ஈரோடு டிச 11
கொங்கு மண்டலத்தில் உள்ள 7 முருகன் திருத்தலங்களில் பூஜிக்கப்பட்ட மங்கள வேல் ஈரோடு சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவிலுக்கு நேற்று மாலை வந்தது .
இந்து அன்னையர் முன்னணியை சேர்ந்த பெண்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டு மங்கள வேலை வரவேற்றனர் . அவர்கள் தங்களது கைகளாலே மங்கள வேலுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த முருக பக்தர்கள் பயபக்தியுடன் ஓம் முருகா வேல் முருகா என்று பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பி கை தட்டி மங்கள வேலை வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு
இந்து அன்னையர் முன்னணி ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார்.
இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.
இந்து அன்னையர் முன்னணியை சேர்ந்த பூர்ணிமா மற்றும் அலமேலு ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். முன்னதாக மங்கள வேல் ஈரோடு வருவதை யொட்டி வள்ளி கும்மியாட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து கடந்த மாதம் 19 ந் தேதி இந்த மங்கள வேல் புறப்பட்டது. இதன் பிறகு
கொங்கணகிரி மலை வழியாக வந்து சிவன் மலை கதித்த மலை பழனி மலை மருத மலை பச்ச மலை வட்ட மலை வந்தது .அந்த பகுதியில் உள்ள பெண்கள் மங்கள வேலுக்கு அபிசேகம் செய்தனர். இந்த வேல் வருகிற 25 ந்தேதி அழகு மலையில் நிறைவு பெறுகிறது.