சென்னை, செப்டம்பர் -25, நிக்கான் இந்தியா நிறுவனம் இன்று சென்னையில் இசட் சீரிஸ் நிக்கான் இசட்6III -க்கு
நிகான் இசட்6 ||| உலகின் முதல் பார்ஸியலி ஸ்டேக்டு சென்சார் கொண்ட கேமாராவை சென்னையில் அறிமுகப்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியின் போது திருமணம், ஃபேஷன் மற்றும் பல்வேறு துறையினர் அனுபவங்கள் கலை நயத்துடன் கூடிய வீடியோக்கள் கொண்டு விளக்கினர்.
இந்த புதிய நிக்கான் கேமரா இசட்9 மற்றும் இசட்8 மாடல்களின் கிராஃபிக்ஸ் அம்சங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிக்கான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தசஜ்ஜன் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவதாவது:- “நிக்கான் இசட்8 மற்றும் இசட்9 மாடல்களிலிருந்து உயர் செயல்திறன் கொண்ட முழு-வடிவத்திலான கேமரா இசட்6III-ஐ காட்சிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தனித்தன்மை வாய்ந்த அம்சங்கள் மற்றும் நிகரற்ற செயல்திறனுடன், தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்களுக்கு வீடியோ மற்றும் புகைப்படப் பிரிவை மறு வரையறை செய்ய இசட்6III தயாராக உள்ளது. இந்த கச்சிதமான தொழில்ரீதியான கேமரா, உலகின் முதல் ” பார்ஸியலி ஸ்டேக்டு” சென்சாரை கொண்டுள்ளது.
இது இமேஜிங் தொழில்நுட்பத்தின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். கூடுதலாக, தொழில் துறையின் முதல் பிரகாசமான மின்னணு பார்வை 5.7 மீட்டர் என்ற படத் தெளிவுத் திறனுடன் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார்.