சென்னை, மே – 30
பசி இல்லாத உலகம்’ என்ற கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தை மலபார் கோல்டு & டைமண்ஸ் குழுமம் பசியில் வாடும் ஏழை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 31,000 உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறது. மேலும் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்து 51,000 உணவுப் பொட்டலங்களை வழங்க உள்ளது.
இதற்கான தொடக்க விழா சென்னை அண்ணாநகர் மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் கிளையில் தமிழ்நாடு மண்டலம் சார்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி . இ. பத்மநாபன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன் மற்றும் அண்ணாநகர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.