தஞ்சாவூர் செப்.29
உலக சுற்றுலா தினத்தையொட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகளை பாரம்பரிய முறைப்படி வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
மங்கல இசையுடன் சுற்றுலா பயணிகள் சந்தனம் குங்குமம் வைத்து மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டன.மேலும் சுற்றுலாபயணிகளுக்குஉதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ்குமார் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இதில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மொரிசியஸ் சிங்கப்பூர் மலேசியா தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்
தொடர்ந்து தஞ்சாவூர் பெரிய கோவிலில் தூய்மை முகாம் நடைபெற்றது .முகாமில் சுவாமி விவேகானந்தா கலைக் கல்லூரி மருதுபாண்டியர் கலை கல்லூரி கரந்தை உமாமகேஸ்வரனார் கலைக்கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கலைக்கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்று வளாகத்தை தூய்மை செய்தனர்.
நிகழ்வில் துணை ஆட்சியர் (பயிற்சி) சங்கர நாராயணன் இந்திய தொல்லியல் துறை பாதுகாப்பு அலுவலர் விக்னேஷ் அரண்மனை தேவஸ்தான செயல் அலுவலர் மாதவன் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக்குழும ஒருங்கி ணைப்பாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்