மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்து ‘தமிழ்க்கூடல்’ நிகழ்வை நடத்தினர். ஆய்வு வளமையர் ஜான்சிராணி வரவேற்புரையாற்றினார். உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் ஒளவை ந.அருள் தலைமை வகித்தார் இப்பள்ளியின் தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தார். பாத்திமா கல்லூரி முன்னாள் இணைப் பேராசிரியர் சரஸ்வதி அய்யப்பன். கபிலர் பாடிய களவு மணம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்வின் போது
இணைப் பேராசிரியர் சரஸ்வதி, உட்பட ஆசிரியர் பெருமக்கள் மற்றும்
பள்ளி மாணவ மாணவிகள் பெருந்திரளாக
கலந்து கொண்டனர்.