ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம்பல்கலையில்வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை – பருத்தி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து,15 வது உலக மண் தின விழா, வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன்.கல்லூரி முதல்வர் முனைவர் ஜேச எட்வர்ட் ஜார்ஜ், துறைத்தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆராய்ச்சி பருத்தி நிலைய பேராசிரியர்கள் முனைவர் எஸ்.ஜோதிமணி, முனைவர் சி.விஜயராகவன் பங்கேற்று, மண் வடிவமைப்பு கண்காட்சியைப் பார்வையிட்டு பாராட்டினர்.
மண் கண்காணிப்பு, மண்சத்து பற்றி உரையாற்றினர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்,சான்றிதழ்களை வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் எஸ்.கங்காதரன்,அ.பாரதி சிறப்பாக செய்திருந்தனர்
ஆசிரியர்கள,மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.