தஞ்சாவூர் ஜூலை 12.
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல துறை, மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதி மொழியினை ஏற்று பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் புகைவண்டி நிலையத்திலிருந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி செவிலியர் கள், குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் பேரணி யில் கலந்து கொண்டு, இராசா மிராசுதார் மருத்துவமனை வரை பேரணி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இராசாமி ராசுதார் மருத்துவமனை மண்டல கண் சிகிச்சை மைய கூட்ட அரங் கில் கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநக ராட்சி மேயர் சண். ராமநாதன், இணை இயக்குனர் (நல பணிகள்) மரு. செல்வகுமார்,துணை இயக்கு னர்கள் (மருத்துவ ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலம்) அன்பழகன், துணை இயக்குனர்க ள் (காச நோய்) மாதவி, (தொழுநோய் )குணசீலன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் கோடீஸ்வ ரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.