சென்னை விருகம்பாக்கத்தில்
உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற
உலக மருந்தாளுனர் தின விழாவில் தலைமை விருந்தினராக டாக்டர் சௌந்தரராஜன்
பங்கேற்று
விழா பேருரையாற்றினார்.
இந்த நிகழ்வின் போது
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா. டாக்டர் அருணாச்சலம் முத்தையா மண்டலம் III-ன் மருந்து கட்டுப்பாடு துறையின் உதவி இயக்குனர். ஏ.அமுதா டிரக்ஸ் (DRUGS) இன்ஸ்பெக்டர் மற்றும் தமிழ்நாடு IPGA-ன் செயலாளர் எம்.பி.முரளி கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
உடன்
திரைப்பட நடிகர் செந்தில், பாடகர் வேல்முருகன்.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சங்கத்தின் தலைவர் ஏ.ஓ.செல்வம் பொருளாளர் செந்தில் மூத்த நிர்வாகிகள் மற்றும் மருந்தாளுனர்கள் பாலகுமார். பாலாஜி திருஞானசம்பந்தம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்ச்சி நிறைவில் மருந்தாளுனர்கள், மருத்துவரின் அனுமதி சீட்டு இன்றி மருந்துகளை விற்க மாட்டோம் தரமான மருந்துகளை நியாயமான விலையில் விற்பனை செய்வோம் என்பன உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டதுடன் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணியும் நடத்தினர். இதில் கே.கே நகர் பகுதியின் தி கெமிஸ்ட் அன்ட் ட்ரக்ஸ்ட் அசோசியேசன் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.