தஞ்சாவூர் பிப்.23.
உலக தாய்மொழி நாள் சிறப்பினை அறிந்து கொள்ளும்வகையில் அரசு உத்தரவுப்படி அன்றைய நாளில் அனைத்து அரசு அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் பள்ளி, கல்லூரிகளில் உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் உறுதிமொழி வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அந்த உறுதிமொழியில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டு வர பாடுபடுவோம் . தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒழிக்க எந்நாளும் உழைத்திடுவோம் அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம் குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்தி டுவோம். இணையற்ற தமிழுடன் இணைய தமிழையும் காத்து வளர்ப்போம் என இருந்தது
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட வன அலுவலர் ஆனந்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது )சரவணன் மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைத்துறை) வேலுமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்