களியக்காவிளை மார்ச் 22
களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளையும் நித்திரவிளை ஜோஸ் தீரஜ் கலை பண்பாட்டு சேவா அறக்கட்டளையும் இணைந்து உலகக் காடுகள் தின விழாவை குழிவிளை – தையாலுமூடு சாலையோரத்தில் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடின.
இவ்விரு அறக்கட்டளைகளின் சார்பில் நடைபெற்ற உலகக் காடுகள் தின விழாவிற்கு வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளையின் தலைவர் என்.எம்.பிரேம்ராஜ் தலைமை தாங்கினார்.நித்திரவிளை ஜோஸ் தீரஜ் கலை பண்பாட்டு சேவா அறக்கட்டளையின் தலைவர் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக
சமூக சேவகரும், இரத்த கொடையாளருமான
உதவும் சிறகுகள் அறக்கட்டளையின் நிறுவனர் ரா. சிவபாலன் பங்கேற்று விழாவை சிறப்பித்தார். குழிவிளை – தையாலுமூடு சாலையோரத்தில் குழிவிளை முதல் செம்மண்ணு முக்கு வரை பூவரசு, வேம்பு எனப் பல வகையான மரக்கன்றுகள் விழாவில் நடப்பட்டன.ஜோஸ் தீரஜ் கலை பண்பாட்டு சேவா அறக்கட்டளையின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜோணி அமிர்த ஜோஸ்,பிரபல மாஜிக் நிபுணர் ராஜ், அன்னை தெரசா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஷெறின்,கோபின் பெனிக்ஸ், திவின் ராஜ், அசோக் ,பிரதீஷ், ஜெகன் ஜோஸ் உட்பட பலர் விழாவில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
பின்னர் 2024 ஆம் ஆண்டு ஜுன் -5 உலக சுற்றுச்சூழல் தின நாளில் குழிவிளை பகுதியில் நட்டுப் பராமரித்து மிக உயரமாக வளர்ந்து நின்ற பூவரசு மரத்தின் அருகே நின்று அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.