கோவை டிச:09
கோவை மாவட்டம் ரயில் நிலையம் எதிரில் திவ்யோதயா அரங்கத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு இன்று மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் ஸ்ரீ சிம்மச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மார்ட்டின் ஓமியோபதி நிறுவனர் லீமாரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் மாநில மாவட்ட நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினர். பொன்னுசாமி கருப்பையா ராகுல் முன்னிலை வகித்தனர். கன்னியப்பன் வரவேற்புரையாற்றினார் கூட்டத்திற்கு வந்த அனைவரையும் ஹேமா நன்றி உரையாற்றினார்.