மதுரை தோப்பூர் அரசு நெஞ்சகநோய் மருத்துவமனையில் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி)
இம்மருத்துவமனையில் உலக சிஓபிடி (COPD) தினம் அனுசரிக்கப்பட்டது செவிலியகண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், நோயாளிகள், நோயாளிகளின் உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சிஓபிடி என்பது புகை பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் நோயாகும் .சிஓபிடியின் நிகழ்வு உலக அளவில் அதிகரித்து வருகிறது மற்றும் இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது .உலக சிஓபிடி நோய்க்கான காரணங்கள், சிகிச்சை மற்றும் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது .இந்த ஆண்டின் கருப்பொருள் உங்கள் நுரையீரல் செயல்பாட்டை அறிந்து கொள்ளுங்கள் ஸ்பைரோமெட்ரி எனப்படும் சோதனை மூலம் நுரையீரல் செயல்பாட்டை மதிப்பிடுவதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிஓபிடியை முன்கூட்டியே கண்டறிவதற்கு ஸ்பைரோமெட்ரி அவசியம். நோயாளிகளுக்கு சிஓபிடி யின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கப்பட்டது. அவர்களுக்கு நுரையீரலின் ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த யோகா மற்றும் சுவாச பயிற்சிகள் அளிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.