ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம்பல்கலையில்
யூத் ரெட் கிராஸ் குழு சார்பில் உலக பிரெய்லி விழிப்புணர்வு தின விழா பல்கலை துணைத் தலைவர் முனைவர் எஸ் சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.
மாணவர் நல இயக்குநர் முனைவர் ஏ.சாம்சன் நேசராஜ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர், பெரம்பலூர் மாவட்ட
சார் ஆட்சியர் மேதகு எஸ்.கோகுல் ஐஏஎஸ் அவர்கள் பேசுகையில், “மாற்றுத்திறனாளி களுக்கான பிரெய்லி
பயிற்சி புத்தகங்கள் எங்கும்பற்றாக்குறையாக உள்ளன. மாற்றுத்திறனாளிகளை மதிப்பிடுவது மாற்ற வேண்டும்.
மாணவர்கள் சமுதாய முன்னேற்றத்திற்காக கனவு காணவேண்டும்.
ஓடும் இரத்தம்
அனைவருக்கும் சிவப்பு தான்.மாற்றுத்தினாளிகளும் உலக அளவில் சாதனை செய்ய முடியும் “
என்று அறிவுரை வழங்கினார்.
மேலும் தான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியாய்
ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றதை பகிர்ந்து கொண்டார்.
உரையை,பேராசிரியை கார்த்திகா தேவி ,சைகை மொழி பெயர்த்தார்.
பேராசிரியர்கள்,பி.டெக் பயிலும் வாய்பேசாத காது துறை, மற்றும் அனைத்து துறைக மாணவர்கள் , கலந்து கொண்டனர்
பேராசிரியர் ஜி. கலுசுராம்,மற்றும் மாணவர் ஸ்ரீகார்த்திக் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.