தஞ்சாவூர் மே 21
தஞ்சாவூரில் உள்ள ரோகிணி மருத்துவமனையில் உலக ரத்த கொதிப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. இந்த முகாமில் இதய நல சிகிச்சை துறை சிறப்பு மருத்துவர் முருகேசன் சிறுநீரகவியல் துறை சிறப்பு மருத்துவர் மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு இரத்த கொதிப்பு வராமல் தடுப்பது எப்படி? என்னென்ன உணவு வகைகள் சாப்பிட வேண்டும் ? என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகளை பொதுமக்களு க்கு வழங்கினர். மேலும் பொது மக்களுக்கு ரத்த கொதிப்பு பரிசோதனை மேற் கொண்டனர். தொடர்ந்து விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த முகாமிற்கான ஏற்பாடு களை கிளன்மார்க் கம்பெனி அமல் தாஸ் ,ஸ்ரீதர், முத்துக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.