தஞ்சாவூர். டிச.8.
தஞ்சாவூரில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை யொட்டி உரிமைப் பாதையில் செல்வோம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர் வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் கூறியதாவது:
எச் ஐ வி என்பது உலகளாவிய பொது சுகாதார பிரச்சனையாக உள்ளது .பல்வேறு தொடர் நடவடிக்கையின் காரணமாக எச் ஐ வி பாதிப்பு குறைந்துள்ளது இருப்பினும் நோய் தடுப்பு நடவடிக்கையில் விழிப்புடன் செயல்பட்டு புதிய தொற்று இல்லாத மாவட்டமாக தஞ்சாவூரை மாற்ற உரிமையின் பாதையில் செல்வோம்.
எச்ஐவி பாதித்த குழந்தைகளு க்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது .மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஊட்டச்சத்து உணவு பெட்டகம், உதவித்தொகை வழங்கப்படுகிறது தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 1,183 பேர் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் தகவலுக்கு 18004191800 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் .ஐயம் தவீர் செயலியை பயன்படுத்தலாம் இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு, ஆட்டோகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல் ,கையெழுத்து பிரச்சாரம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன .இதில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளர் ஜெனிபர் அருள் மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் காந்திஜி சாலை வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது