கீழக்கரை. ஆக 28-
கீழக்கரை நகரில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழக்கரை நகராட்சி 21 வார்டுகளில் தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மூலம் கடந்த 15 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த தூய்மை பணியாளர்கள் 4 முறை வேலை நிறுத்தம் செய்துள்ளனர். ஒப்பந்த ஊழியர்களுக்கு நகராட்சி நிர்வாகம் ஊதியம் முறையாக வழங்கவில்லை என்றார். நகராட்சி நிர்வாகம் மூலம் ஊதியம் வழங்கினால் தான் மீண்டும் பணிக்கு திரும்புவோம் என தூய்மை பணியாளர்கள் கூறினர். இதனால் நகர் முழுவதும் சுகாதாரக்கேடு நிலவி உள்ளது.
இது குறித்து
நகர் மன்ற தலைவர் செகனாஸ்
ஆபிதா துணை தலைவர் ஹமீது சுல்தான் கூறுகையில்,
அரசு வழிகாட்டல் நெறிமுறையின்படி 15 மாதத்திற்கு ரூ.1. ஒரு கோடியை 95 லட்சம் கொடுக்க வேண்டும் ஆனால் நாங்கள் இரண்டு கோடியை 7 லட்சம் கொடுத்து உள்ளோம் அரசு வழிகாட்டுதலின்படி கூடுதலாக பணம் செலுத்தியுள்ளோம் மேலும் துப்புரவு பணியாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நேற்று நாங்கள் இன்று முதல் வேலை செய்வதற்கு மகளிர் குழு மூலமாக உங்கள் மாத ஊதியத்தை நகராட்சி பொறுப்பேற்றுக் கொள்ளும் கூறி நகர் முழுவதும் தேங்கி நிற்கும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றினார்.