அருமனை, பிப்- 17
அருமனை அருகே சிதறால் மலைக்கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (45). மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நேற்று சிதறால் மலைக்கோயில் பக்கம் உள்ள ஒரு பனையில் நுங்கு வெட்டுவதற்காக சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை.
பின்னர் அவரது மனைவி அங்கு தேடி சென்றுள்ளார். அப்போது தங்கமணி பனைமரத்திலிருந்து தவறி விழுந்தது தெரியவந்தது. இது தொடர்ந்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.