சிவகங்கை :ஆக21
சிவகங்கையில் தனியார் திருமண மண்டபத்தில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார்
அப்போது மாநில பொதுச் செயலாளர் கே. திருச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது : டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணிவரன் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தி அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கி அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய சுழற்சிமுறை பணியிட மாறுதல்களை அமுல்படுத்தி டாஸ்மாக் ஊழியர்களுக்கு சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசின் உத்தரவுப்படியும் நீதிமன்ற உத்தரவு படியும் டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வு வயதை 60 -மற்றும் ஆக மாற்றிடவும் டாஸ்மாக் கடைகள் தோறும் சிம்கார்டுடன் கூடிய கைபேசியை டாஸ்மாக் நிர்வாகம் வழங்க வேண்டும்
மேலும்
காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில் ஊழியர்கள்ளின் மனதை பாதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் இந்த கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அமைப்பின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் சி.ஐ.டி.யூ மாநிலத் துணைத் தலைவர் தெய்வராஜ் மாநில பொருளாளர் சந்திரன் சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் சேதுராமன் துணை பொது செயலாளர்கள் ஜான் அந்தோணிராஜ் ராமு
பி.முருகன் சிவகங்கை மாவட்ட சங்கத் தலைவர் திருமாறன் செயலாளர் குமார் பொருளாளர் பாண்டி மாவட்டத் துணைத் தலைவர் மெய்யப்பன்
யா.சேவியர் உள்பட மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.