மதுரை டிசம்பர் 26,
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எம்.கல்லுப்பட்டியை அருகேயுள்ள எம்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ் இவர் அசாம் மாநிலத்தில் உள்ள நிஹாம்பள்ளி முகாமில் இராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 22 அன்று இன்பராஜ் முகாமிற்கு உணவு எடுத்துச் செல்லும் போது, அவர் சென்ற இராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இன்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அன்னாரது உடல் (25.12.2024) நேற்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதனை அடுத்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா அன்னாரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.