ராமநாதபுரம், ஜன.30-
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பனைக்குளம் சந்திப்பு நாடார்வலசை பகுதியில் பொது மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இடையூறாக உள்ள மதுபான கடையை அகற்றக் கோரி விம் இந்தியா சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது பனைக்குளம் நாடார் வலசை மதுக்கடையை அகற்றக்கோரி விம் இந்தியா சார்பில் நடந்தது. நகர் தலைவர் ரம்ஜான் பேகம் தலைமை வகித்தார். மகளிர் மன்றத் தலைவர் பாலேஸ்வரி, எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் ரியாஸ் கான், திருவாடானை சட்டமன்றத் தொகுதி தலைவர் ஹனீப், துணைத்தலைவர் மூர்த்தி, செயலாளர் ஹமீது இப்ராஹீம், இணை செயலாளர்கள் கஜினி, தீன், சுல்தான் உள்பட பலர் பங்கேற்றனர். இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், கடந்த 2024 ஆக 28 ல் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் வருவாய், காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பெண்களிடம் சமரசம் பேசினர். இந்த இக்கடையை 2024 டிசம்பர் இறுதி வாரத்திற்குள் இட மாற்றம் செய்து விடுவதாக உறுதி அளித்தனர். உறுதிமொழி காலம் முடிந்து ஒரு மாதமாகியும் மதுக்கடை அகற்றப்படவில்லை. இக்கடையை அப்புறப்படுத்தும் வரை காத்திருப்பு போராட்டத்தை விலக்கி கொள்ளப் போவதில்லை என்றனர். தேவிபட்டினம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா. பகல் 12 மணிக்கு திறக்க இருந்த டாஸ்மாக் கடை போராட்டம் காரணமாக திறக்க முடியாமல் வெளியே காத்து இருந்தனர். பதட்டமான சூழ்நிலை காரணமாக போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.