மகளிர் சட்ட உரிமைகள்
விழிப்புணர்வு முகாம்
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம்பல்கலையில்
மகளிர் சட்ட உரிமைகள் பற்றி விழிப்புணர்வு முகாம் வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில்
நடைபெற்றது.
இணை வேந்தர் டாக்டர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன் , துணைத் தலைவர் எஸ்.சசி ஆனந்த், துணை வேந்தர்எஸ்.நாராயணன்,பதிவாளர் வி.வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர், மதுரை கிளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.தீபா , மகளிருக்கான சட்ட உரிமைகள் பற்றி விவரித்தார். பல்கலை
மகளிர் மேம்பாட்டுக் குழு,
தலைவர் எம்.கல்பனா வரவேற்றார்.
பேராசிரியைகள்,
மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பேராசிரியைகள் அகிலா,செல்வராணி,
சங்கீதா, சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
பேராசிரிய முத்துலட்சுமி நன்றி கூறினார்.