[6:43 pm, 25/6/2024] +91 90807 28304: மதுரை
நிர்மலா பெண்கள் மேனிலைப்பள்ளி, மாணவிகள் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேனிநிலைப் பள்ளியில் சர்வதேச
போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை கோவில் சரகம் காவல் துறை உதவி ஆணையர் நாகராஜ் தலைமையேற்று
பள்ளி முதல்வர்
ஜோஸ்பின் ராணி, மற்றும்
பீப்பிள் பிளஸ் மாத இதழ் நிறுவனர், ஜான்
ஆகியோர் முன்னிலையில்
தொடங்கி வைத்தார்.
இப்பேரணியானது நிர்மலா பள்ளியில் இருந்து துவங்கியது மாணவிகள்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு போதை பொருட்களின் தீமைகள் குறித்த எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பியவாறு பேரணி
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் வழியாக சென்று நிர்மலா பள்ளியில் வந்து நிறைவு பெற்றது.
இப்பேரணியில் சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் அப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் பள்ளி வளாகத்தில் மாணவிகள் மத்தியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர்கள்
போதைப் பொருள் குறித்த தீமைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்தனர் .
மேலும்
உடல் நலனுக்கும் ஆன்ம நலனுக்கும் கேடு விளைவித்து குடும்பத்தைச் சீரழித்து ஒழுக்கத்தை கெடுக்கும் போதைப் பொருளின் விளைவுகள் பற்றியும் அவற்றைப் பயன்படுத்தினால் சட்ட அடிப்படையில் கிடைக்கும் தண்டனைகள் பற்றியும் எடுத்துறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள்
உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சாமிதுரை, கோவில் சரகம் காவல் துறை ஆணையர் மதுரைவீரன், பீப்பிள் பிளஸ் எடிட்டர் ராஜபாண்டியன்,
மற்றும் பள்ளி ஆசிரியப் பெருமக்கள் மாணவிகள் அனைவரும் போதை இல்லா தமிழகம் உருவாக
போதைப் பொருள் ஒழிப்பு
உறுதிமொழி ஏற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை நிர்மலா பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.
[6:44 pm, 25/6/2024] +91 90807 28304: