நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 1. 12 ஆயிரத்து 750 மகளிருக்கு மாதம் தோறும் தலா ரூபாய் 1000. மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் மாதத்தோறும் எரிவாயு சிலிண்டர் வாங்க , கல்வி செலவுக்கு , இந்த தொகை பயன்படுத்துவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார் மகளிர் உரிமைத்தொகை பள்ளி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை இலவச பேருந்து பயண சலுகை ஆகியன பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இதன் ஒரு பகுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்க தேர்தல் வாக்குறுதி அளித்ததின் பேரில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 15.09.23 அன்று முதல்வரால்அண்ணா பிறந்த நாளில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்படி ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சநாடு கிராம சமுதாய கூடத்தில் உரிமை தொகைக்கான பணம் எடுக்கும் அட்டை மற்றும் தகவல் கையேடுகள் வழங்கப்பட்டு உடன் குன்னூர் வட்டத்தில் 19 ஆயிரத்து 32 மகளிரும் கூடலூர் வட்டத்தில் 22 ஆயிரத்து 950 மகளிரும் கோத்தகிரி வட்டத்தில் 16, ஆயிரத்து 263 மகளிரும் குந்தா வட்டத்தில் 6 ஆயிரத்து 718 மகளிரும் பந்தலூர் வட்டத்தில் 20 ஆயிரத்து 468 மகளிரும் என மொத்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 750 மகளிர்க்கு உரிமை தொகை வழங்கப்படுவதாகவும் மேலும் விடுபட்ட மகளிர் அனைவருக்கும் ஆய்வு செய்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.